சத்துணவு பணியாளர் சங்கம் - அரசு இடையிலான பேச்சு தோல்வி : போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் அறிவிப்பு

சத்துணவு பணியாளர் சங்கம் - அரசு இடையிலான வார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சத்துணவு பணியாளர் சங்கம் - அரசு இடையிலான பேச்சு தோல்வி : போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் அறிவிப்பு
x
5 கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் அரசு இன்று பேச்சு வார்த்தை நடத்தியது. அமைச்சர் சரோஜா முன்னிலையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதாக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்