ஷேர் ஆட்டோ ஓட்டுனரை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்

மதுரை கோரிப்பாளையத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் நடுரோட்டில் அடித்து உதைத்துள்ளார்.
ஷேர் ஆட்டோ ஓட்டுனரை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்
x
கோரிப்பாளையத்தில் இருந்து, தெற்கு வாசல் வரை 40 வயது பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார். கட்டணமாக 15 ரூபாய்க்கு, 20 ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுனர் சில்லறை இல்லை என கூறியதோடு ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஆட்டோ ஒட்டுனரை சட்டையைப்  பிடித்து இழுத்து தாக்கினார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, போலீஸ்காரர் ஒருவர் வந்து ஆட்டோ ஓட்டுனரை  காவல் நிலையம் அழைத்து சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்