"மாணவ - மாணவிகள் பாதுகாப்பான வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்"

மாணவ - மாணவிகள் பாதுகாப்பான வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவ - மாணவிகள் பாதுகாப்பான வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
x
இது தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை உடுத்த கூடாது எனவும் டெரிகாட்டன், டெரிலின் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய ஆடைகளை அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பட்டாசு வெடிக்கும் போது மாணவர்கள் அருகில் தண்ணீர் வாளி  வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  Card-4 சப்தம் குறைந்த பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும்,  பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்