இந்தியாவில் முதல்முறையாக 160 கி.மீ வேகம் கொண்ட 'ரயில் 18'

நாட்டிலேயே முதல்முறையாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ஓடக்கூடிய அதிவேக ரயிலை, ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி துவக்கி வைத்தார்.
இந்தியாவில் முதல்முறையாக 160 கி.மீ வேகம் கொண்ட ரயில் 18
x
* முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.  

* இந்த ரயிலுக்கு இன்ஜின் தனியாக இல்லாமல், பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் ஆயிரத்து 128 இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 

* வைஃபை வசதி, ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதி, ரயில் ஓட்டுநர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் என கூடுதல் வசதிகள் உள்ளன. 

* இந்த ரயிலை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி துவக்கி வைத்தார்.

* சோதனை ஓட்டத்துக்கு பின், இந்த ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்