"எப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்கள் ரூ. 40 ஆயிரத்துக்கு, 500 வழக்கறிஞர்களுக்கு விற்பனை"

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டீபனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
எப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்கள் ரூ. 40 ஆயிரத்துக்கு, 500 வழக்கறிஞர்களுக்கு விற்பனை
x
* சென்னையில் இறப்பு ஏற்பட்ட சாலை விபத்து சம்பவங்களை தேடும் ஸ்டீபன், அவர்கள் காப்பீடு செய்திருந்தால் அதற்கான இழப்பீடு பெற்றுத் தருவதாக கூறி, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பத்திரம் உள்ளிட்ட அணைத்து ஆவனங்களையும் சேகரித்துள்ளார். 

* அதன் பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளுவர் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் பணிபுரியும் சுமார் 500 வழக்கறிஞர்களுக்கு ஒரு ஆவணத்தை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இதன் முழு பின்னணி தெரியாத வழக்கறிஞர்கள், அந்த ஆவணங்களின் அடிப்படையில் இழப்பீட்டு பெறுவதற்காக தீர்ப்பாயங்களில் வழக்காக தாக்கல் செய்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்