நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடுக்கடலில்  தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
x
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரும், புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் 6 பேரும், நாகை பகுதியை சேர்ந்த 4 மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நீரியல் துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டு, வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுக்கு பின், சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிய வருகிறது. இலங்கை சிறையில் ஏற்கனவே 16 மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற இரண்டே நாட்களில் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்