இருளர் மாணவர்களுக்கு புத்தாடை - சொந்த செலவில் வாங்கி கொடுத்த ஆசிரியர்கள்
சிதம்பரம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் இருளர் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொந்த செலவில் புத்தாடை வாங்கி கொடுத்து மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர் அன்றாட கூலி வேலைக்கு சென்றால் தான் அவர்களின் உணவு தேவையையே பூர்த்தி செய்ய முடியும். இந்நிலையில், எந்த ஒரு பண்டிகையையும் பெரிதாக கொண்டாட முடியாத இந்த மாணவர்களின் ஏக்கத்தை இந்த பள்ளியின் ஆசிரியை சசிகலா நிவர்த்தி செய்துள்ளார்.
ஆசிரியர் சசிகலாவின் முயற்சியால் அந்த பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழாவை நடத்தி அனைத்து மாணவர்களுக்கும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கினர். இந்த விழா மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story