கோமுகி அணை திறப்பு : மாவட்ட ஆட்சியர் மலர் தூவி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கோமுகி அணையை முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டது.
கோமுகி அணை திறப்பு : மாவட்ட ஆட்சியர் மலர் தூவி திறந்து வைத்தார்
x
46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையை விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் திறக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வினாடிக்கு 220 கன அடி நீர் பாசன வாய்க்காலில் திறந்து வைத்து மலர் தூவினார். இதன் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும்.   


Next Story

மேலும் செய்திகள்