7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இறந்த பெண்ணின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
x
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்த பாண்டியராஜனின் மனைவி நாகலெட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிகிழமை நாகலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பாண்டியராஜ் மற்றும் அவரது பெற்றோர் மீது நாகலட்சுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கை போலீசார் எடுக்கவில்லை என கூறி இறந்த நாகலெட்சுமியின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு உரிய விசாரணை நடத்தகோரி மனு கொடுத்தனார்.

Next Story

மேலும் செய்திகள்