சுமோ கார் - மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து..!

ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுமோ கார், மினிவேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சுமோ கார் - மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து..!
x
காரைக்குடியை சேர்ந்த சித்தி விநாயகம் என்பவர் தமது குடும்பத்தின​ருடன், ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்து விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வட மாநில சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த மினிவேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் சிறுவர்கள் சுமோ காரில் இருந்த சித்தி விநாயகத்தின் மகன்கள் சாய் ராம் மற்றும் திருகுமரன் மற்றும் ஆகிய இரண்டு சிறுவர்களும் அம்பிகா என்ற பெண் முதியவர் ஒருவர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
உடல் நசுங்கி பலியாயினர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேணிக்கரை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்