கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை..!
ஓமலூர் அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி 4 நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே கல்லூரி பேருந்தின் ஓட்டுநராக வேலைப்பார்த்து வரும் வெங்கடாசலம் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடாசலத்தை போக்சோ சட்டத்தின் கீழ் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story