கன்னியாகுமரி : பொதுமக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நெல்லியார்கோணம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து பனை மரத்தில் விஷ வண்டு கூடு அமைந்துள்ளது.
கன்னியாகுமரி : பொதுமக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்..!
x
விஷ வண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அவ்வப்போது பொதுமக்களை கடிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் அதை அகற்ற தீயணைப்பு துறையினர் முன் வரவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக விஷ வண்டு கூட்டை அகற்ற தீயணைப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்