பச்சிளங்குழந்தை எரித்து கொலை - குழந்தையின் எலும்புகளை கைப்பற்றிய போலீசார்
நாகையில் பச்சிளங்குழந்தை எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தில் பால்குளத்து வீரன் கோயில் அருகே பச்சிளங்குழந்தையின் எலும்பு கூடு எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றினர். குழந்தை எரிக்கப்பட்ட இடத்தின் அருகில் பால்குளத்து வீரன் கோவில் உள்ளதால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Next Story