தீபாவளிக்கு ஆண்களுக்கான புதுவரவு உடைகள் என்ன?

தீபாவளி பண்டிகைக்கு ஆண்களுக்கான புதுவரவு உடைகள் என்ன வந்திருக்கிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
தீபாவளிக்கு ஆண்களுக்கான புதுவரவு உடைகள் என்ன?
x
பெண்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்க பல மணி நேரம் ஆகும், ஆனால் ஆண்களுக்கான உடைகளை 10 நிமிடங்களில் வாங்கி விடலாம் என்பது தான் மக்களின் பரவலான எண்ணம்.. சுத்தி சுத்தி அதே கலர்களில் தான் ஆண்களுக்கான உடைகள் வரும், ஷர்ட், பேண்டுகளில் என்ன புது டிசைன் வந்திட போகுது?என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுக்கும் வகையில் வந்திருக்கிறது இந்த ஆண்டு புதுவரவு உடைகள்..திருமணம் மற்றும் பார்ட்டிகளின் போது அணிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்த ஆண்டு வந்திருக்கிறது இந்த பார்ட்டிவேர் உடைகள்.. பார்ப்பதற்கு பளிச் தோற்றத்தில் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட இந்த உடைகள் இளைஞர் பட்டாளத்தின் பேவரிட் சாய்ஸாக இருக்கிறது.சில்க் பேப்ரிக் மிக்ஸிங் மற்றும் பேன்ஸியான பட்டன் வொர்க் கொண்டு இந்த உடைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் தீபாவளி புதுவரவில் பிரதான இடம் பிடித்திருக்கிறது இந்த ஷர்ட்...அதேபோல் அன்றாட உபயோகத்திற்கும் சரி, அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கும் சரி.. இந்த ஆண்டு ஏகப்பட்ட உடைகள் வந்திருக்கிறது. சின்ன சின்ன கட்டம் போட்ட ஷர்ட் வகைகள், பெரிய அளவிலான கட்டம் போட்ட ஷர்ட்கள் என கடைகளில் கலர் கலராக அணிவகுத்து நிற்கிறதுஅதற்கு ஏற்றார் போல பல்வேறு பிராண்டுகளில் கட்டம் போட்ட பேண்ட்களும் கடைகளில் கிடைக்கிறது. இதனால் இந்த கட்டம் போட்ட உடைகளை வாங்கிச் செல்வதில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்... பிரிண்டட் வேலைப்பாடுகள் கொண்ட சட்டைகளும் இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகும் ஒரு உடையாக இருக்கிறது.எப்போதும் ப்ளூ, பிளாக் கலர்களில் தான் ஆண்களுக்கு ஜீன்ஸ் கிடைக்கும் என்பதை மாற்றும் வகையில் இந்த ஆண்டு இளம் பச்சை, லைட் ஒயிட் மற்றும் க்ரே கலர்களில் ஜீன்ஸ் புதுவரவாக வந்திருக்கிறது.அதேபோல் ஆண்களுக்கு கூடுதல் கம்பீரம் தரும் வகையிலான லாங் குர்த்தாவும் இந்த ஆண்டு தீபாவளிக்கு இளைஞரின் பிடித்த உடையாக மாறும் என்பது நிச்சயம்... அழகிய தோற்றம் தரும் இந்த லாங் குர்த்தா செட் சற்று உயரமான ஆண்களுக்கு பொருத்தமான தேர்வு.பண்டிகை என்றால் பாரம்பரிய உடையான வேட்டிகளிலும் இந்த ஆண்டு புதுவரவுகள் வரிசைகட்டி நிற்கிறது. புதிதாக வேட்டிகளை அணிந்து கொள்ளும் ஆண்களுக்கு உதவும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வந்திருக்கிறது. காட்டன் வேட்டிகளில் ஒட்டிக்கோ கட்டிக்கோவை போன்றே பட்டு வேட்டியிலும் இதனை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கிறார்கள். கூடுதலாக இந்த வேட்டியிலும் பாக்கெட் இருப்பது கூடுதல் சிறப்பு.அதேபோல் ஒரே வேட்டியை இருபக்கமும் திருப்பி கட்டிக் கொள்ளும் வகையில் டூ இன் ஒன் வேட்டிகளும் இந்த ஆண்டு சந்தைக்கு புது வரவு... ஒரே வேட்டி, 2 சட்டைகள் என அடுத்தடுத்து கலர்புல்லாக அணிந்து கொள்ளலாம் என்பதும் ஆண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம்.பாரம்பரிய உடை, மாடர்ன் உடைகள் என ஆண்களுக்கான உடைகளும் இந்த ஆண்டு டிரெண்டியாக வந்திருப்பது இளைஞர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது... ஆண்களுக்கும் இந்த தீபாவளி பண்டிகை வண்ணமயமான பண்டிகையாகவே இருக்கும் என்பது நிச்சயம்.




Next Story

மேலும் செய்திகள்