தலைமறைவாக வாழ்ந்ததன் நூற்றாண்டு விழா : பாரதியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாரதியார் தலைமறைவாக வாழ்ந்த மேலநாகை கிராமத்தில் அதன் நூற்றாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமறைவாக வாழ்ந்ததன் நூற்றாண்டு விழா : பாரதியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை
x
ஆங்கிலேயர் ஆட்சிக் கால அடக்குமுறையின்போது,  கடந்த 1918 ஆம் ஆண்டு மேலநாகை கிராமத்தில் பாரதியார் தனது பிரதான அடையாளங்களான மீசை, தலைப்பாகை இல்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். அங்கு அவர் தங்கியிருந்த மாளிகை புனரமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மேலநாகையில் பாரதியார் தங்கி சென்றதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பலர் ஒன்றுகூடி பாரதியின் திரு உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவர்களுக்கு கவிதை,கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்