கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு - பட்டாசு விற்பனையாளர்கள்

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு -  பட்டாசு விற்பனையாளர்கள்
x
* விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில்பட்டி,  ஏழாயிரம் பண்ணை போன்ற பகுதிகளில் 900 மேற்பட்ட பட்டாசு ஆலைகளில்,  5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

* விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும் கவரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட புதுவகையான கம்பி மத்தாப்பு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். 

* இதே போல் 7  முதல் 75 செ.மீ  வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும்,  குறிப்பாக PINK  கம்பி மத்தாப்பு மற்றும் லெமன் மத்தாப்புகள்  இந்தாண்டுக்கான புதுவரவாக உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.  

* புது வரவாக 4 மற்றும் 5 வண்ணங்களை கொண்ட  ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 50 முதல் 100  பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிப்பதாக ஊழியர் நந்தினி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்