துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு
பதிவு : அக்டோபர் 24, 2018, 06:37 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள்.  துப்பாக்கி சூட்டின்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள்,  உத்தரவிட்ட தாசில்தார் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது. தேவைப்படுபவர்களை இந்த அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து பெற்ற 179 ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.