இருசக்கர வாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த மாணவர் ஸ்மார்ட் பைக் வடிவமைப்பு

விபத்தை தடுக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் பைக்கை கடலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் வடிவமைத்துள்ளார்.
இருசக்கர வாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த மாணவர் ஸ்மார்ட் பைக் வடிவமைப்பு
x
* கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அகரமுதல்வன் பொறியியல் கல்வி படித்து வருகிறார்.

* கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற தனது நண்பனைப் பறிகொடுத்த இவர், அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்தார். 

* அப்போதுதான் விபத்தை தடுக்கும் விதமாக இருசக்கரவாகனங்களை மேம்படுத்தும் எண்ணம் உதயமானது. நீண்ட நாள் முயற்சியின் பலனாக, விபத்து ஏற்படாமல் தடுக்கும், இருசக்கரவாகனத்தை வடிவமைத்துள்ளார்.

* இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மட் அணியாமல் இருப்பது தான் பெரும்பாலும் உயிரிழப்பிற்கு காரணம் என்பதால், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே  ஸ்டார்ட் ஆகும் வகையில் வடிவமைத்துள்ளார்.

* இதேபோல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்ப சாதனங்களை பொருத்தியுள்ளார்.

* வாகனம் திருட்டு போவதிலிருந்து தடுக்கவும் ஸ்மார்ட் கார்டு, பாஸ்வேர்ட் போன்ற முறைகளை செயல்படுத்தியுள்ளார். இந்த அம்சங்களை பைக்கில் இணைப்பதற்கு 21 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்கிறார், அகர முதல்வன்.

* தற்போது தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அகரமுதல்வன்.



Next Story

மேலும் செய்திகள்