ரயில் நேரத்தை தாமதமாக்க வெடிகுண்டு மிரட்டல் - பிடிபட்ட இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம்
பதிவு : அக்டோபர் 20, 2018, 05:15 PM
கோவை விரைவு ரயில் புறப்படும் நேரத்தை தாமதப் படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக வடபழனி காவல்துறையிடம் பிடிபட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கோவை செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. உடனடியாக மிரட்டல் வந்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரித்தனர். மறுமுனையில் பேசிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார், தன்னுடைய சொந்த ஊரான வேலூருக்கு சென்று பெற்றோரை பார்க்க இருப்பதாகவும், கோவை விரைவு ரயில் நேரத்தை தாமதப்படுத்த பீதியை கிளப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே, செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போலீசார், சென்னை கோடம்பாக்கம் சென்று பீரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.