"ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த கல்வி முறையில் மாற்றம்?"- கல்வித்துறை அறிவிப்பு

ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ கல்வி முறையில் மாற்றம் செய்வதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த கல்வி முறையில் மாற்றம்?- கல்வித்துறை அறிவிப்பு
x
* மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையும் ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  


* 2012-2013 ஆம் கல்வியாண்டில்,  ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த முறையில், ஒரு கல்வி ஆண்டிற்கான  பாடம் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டு  3 பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2013-2014 ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9-ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்ட நிலையில். தற்போது 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ கல்வி முறையை கைவிட பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லாத நிலையில், ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் இந்த முறையில் படித்து விட்டு பத்தாம் வகுப்பு தேர்வு முறை மற்றும் கற்கின்ற விதம் அனைத்தும் மாறுபடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக​வும்,   இதன் காரணமாக பழைய முறையையே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உரிய முடிவை எடுக்குமாறு , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. பொதுக் கல்வி வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்