தண்ணீர் இல்லாததால் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் மூடப்பட்டது

சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் EXPRESS AVENUE வணிக வளாகம் தண்ணீர் இல்லாததால் இன்று மூடப்பட்டது.
தண்ணீர் இல்லாததால் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் மூடப்பட்டது
x
சென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக, தண்ணீர் கொண்டு வரப்படாததால், ராயப்பேட்டையில் இயங்கி வரும் EXPRESS AVENUE வணிக வளாகம் இன்று 12 மணியளவில் மூடப்பட்டது. வணிக வளாகத்திற்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வணிக வளாகத்தில் இயங்கும் திரையரங்குகளில் 'ஆன் லைன்' மூலம் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, தண்ணீர் வர வாய்ப்பு இல்லாததால், மாலை காட்சிகள் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. வணிக வளாகத்திற்கு வந்த வெளிநாட்டினர்களும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். நாளை முதல் வரிசையாக விடுமுறை தினங்களாக இருப்பதால், பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


2 லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்ப அரசு உறுதி - உணவக மேலாளர்


நேற்று 20%...இன்று 50% ஓட்டல்கள் மூடல் - தமிழ்நாடு ஓட்டல் சங்கம்


Next Story

மேலும் செய்திகள்