விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு

வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு
x
வேலைவாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை - நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர் - வீராங்கனைகளுக்கான அரசு வேலைவாய்ப்பில், உள் இட ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்