அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு
x
ஏற்கெனவே பதவியில் இருந்த ராஜரத்தினம், கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக இருந்த எமிலியாஸ், பொறுப்பு தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை, அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோல, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்