பாலியல் தொல்லையாலே இலங்கை தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - பேராசிரியர் மணிவண்ணன்

இலங்கையில் பாலியல் தொல்லை மற்றும் வறுமையால் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.
பாலியல் தொல்லையாலே இலங்கை தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - பேராசிரியர் மணிவண்ணன்
x
இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்று 10 ஆண்டுகளை கடந்த பிறகு  தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலைமை எப்படி உள்ளது என சென்னையிலிருந்து பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் தமிழக திரும்பிய அவர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய மணிவண்ணன், இலங்கையில் தமிழ் மக்கள் எண்ணிக்கையை குறைத்தால் பிரச்சனை குறையும் என்று அந்நாட்டு அரசு செயல்பட்டு வருவதாக மணிவண்ணன் கூறினார். பாலியல் தொல்லை மற்றும் வறுமையால் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்