ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு
x
ரேஷன் அட்டைகளுக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்க வேண்டும், மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள்,  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

ரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்க வேண்டும்,  ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ படி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்