"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்
x
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி அளித்துள்ள விளக்கத்தில், ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கப்பட்ட போது யார் யாரெல்லாம்  விசாரிக்கப்பட வேண்டும் என எந்த பட்டியலையும் அரசு தரப்பில் தரவில்லை என தெரிவித்துள்ளார். ஆணையமே தானாக முன்வந்து போயஸ்கார்டனில் துவங்கி, அப்பலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய, 110 பேரிடம் ஆணையம் விசாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அதன்படி குறைந்தது நான்கு மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் விசாரணையில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் எவ்வித காலதாமதமும் செய்யவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு இல்லை என்றும் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்