திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமானி உடனான உரையாடல் பதிவு ஒப்படைப்பு

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த இன்று வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமையிலான குழுவினர் திருச்சி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமானி உடனான உரையாடல் பதிவு ஒப்படைப்பு
x
திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை கிளம்பிய ஏர் இந்தியா விமானம் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு பறந்தது. விமானத்தில் அடிப்பாகம் சேதமடைந்த நிலையில்,136 பயணிகள் உடன் விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விபத்துக்கு விமானியின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. விமானத்தை அவசரமாக தரையிறக்க திருச்சி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமானிக்கு உத்தரவு சென்றதா? என்றும், அப்படி சென்றிருந்தால், 4 மணி நேரம் பறந்த விமானம், துபாய் வான் எல்லை வரை சென்று திரும்பி, மும்பையில் தரையிறக்கப்பட்டது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், திருச்சி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியுடன் மேற்கொண்ட, 5 மணி நேர உரையாடல்கள் தொகுப்பு, இந்திய விமான நிலைய ஆணையக் குழும அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கை, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்