நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்

நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக் கழிவு நீரால், 19 மாவட்ட மக்களுக்கு தோல் மற்றும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்
x
திருப்பூர் மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை வழியாக கரூர் மாவட்டத்துக்கு பாயும் நொய்யல் ஆற்றில், சாயக் கழிவு நீர் கலந்து வருவதால் ஆற்று நீரினுடைய  உப்புதன்மை ஆயிரத்து 500 டி.டி.எஸ். க்கும் மேல் உள்ளதால், மக்கள் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்ட நிலங்களில் தற்போது கோரை புல் நட்டு வளர்ந்து வருவதாகவும், நொய்யல் ஆற்றினை பாதுகாக்க , அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்