சேலம் ரயில் கொள்ளை நடந்தது எப்படி?

சேலம் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் ரயில் கொள்ளை நடந்தது எப்படி?
x
* சேலத்தில் இருந்து எழும்பூருக்கு 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு  8 ந் தேதி இரவு புறப்பட்ட ரயில் கூரையில் 5  கொள்ளையர்கள்  ஏறியுள்ளனர்.

* சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது கூரையில் துளையிட்டு ரயில் பெட்டிக்குள்  இறங்கி உள்ளனர் 

* மரப்பெட்டிகளை உடைத்து பண கட்டுகளை லுங்கியில் வைத்துகோண்டு விருத்தாசலத்தில் இறங்கியுள்ளனர்.

* அங்கே காத்திருந்த மற்ற கூட்டாளிகளிடம் பணக்கட்டுகளை கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பியுள்ளனர்.

* மத்திய பிரேதசம் ராஜஸ்தான் டெல்லி அரியானா குஜராத் மற்றும் மகாராஷ்டரா வில் கொள்ளையில் ஈடுபட்ட பார்தி குழுவுடன் தொடர்புடையர்கள் 

* இவர்கள் பல மாநிலங்களுக்கு சென்று ரயில் நிலையம் அருகே தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி நோட்டமிடுவது இவர்கள் வழக்கம்

* கட்டிட தொழிலாளி, பலூன், பொம்மை விற்பனையாளர்கள் போல சுற்றி திரிந்து கொள்ளைக்கான இலக்கை தீர்மானிப்பார்கள்.


Next Story

மேலும் செய்திகள்