புதிய தலைமைச்செயலக முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை

புதிய தலைமைச்செயலக முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய தலைமைச்செயலக முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை
x
* புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்கவும் தனிநீதிபதி சுப்பிரமணியம் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். 

* இந்த உத்தரவை எதிர்த்து, திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறினார்.

* திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஆரம்ப கட்ட விசாரணை என்பதால், அடுத்த 10 நாட்களில் வழக்கு பதியப்படலாம் என்பதால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

* இதை ஏற்ற நீதிபதிகள், புதிய தலைமைச் செயலக கட்டட விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மனுவுக்கு 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனால், இந்த விவகாரம் தொடர்பான லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்