உறவுகளை இணைத்த கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறை

உறவுகளை இணைக்கும் கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறையின் சிறப்புகள்
உறவுகளை இணைத்த கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறை
x
* புறா மூலம் தூது விட்ட  மக்களுக்கு அஞ்சல் துறையின் பணி அளப்பரிய செல்வமாகவே தெரிந்தது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தவர்களின் உணர்வுகளை தாங்கி வந்த கடிதங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏராளம்.

* சிறுக சிறுக சேர்த்த பணத்தை வெளியூரில் படிக்கும் தன் பிள்ளைக்கு மணியார்டர் மூலம் அனுப்பிய பெற்றோரையும் பார்க்கலாம். வேலை வாய்ப்பு உத்தரவாத கடிதத்தை தபால் காரர் கொண்டு வந்து கொடுத்த போது மகிழ்ச்சியில் திளைத்தவர்களையும் பார்த்திருப்போம்.

* இதுபோல பல தரப்பினருக்கும் பேருதவியாக இருந்தது அஞ்சல்துறை தான்.. இதை நினைவு கூர்ந்து பார்ப்பவர்களும் அதிகம் உண்டு. 

* உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக உள்ளது இந்தியா. அதிக அளவில் ஊழியர்கள் பணிபுரியும் பொதுத்துறை நிறுவனம் என்பதும் இத்துறையின் சிறப்பாக உள்ளது.

* நவீன காலத்தில் சமூக வலைத்தளம், இணையத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல அஞ்சல் துறையிலும் பல மாற்றங்கள் உருவாகின. 

* அஞ்சலக சேமிப்பு, ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், பார்சல் சர்வீஸ் என பல பணிகளை அஞ்சல் துணை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அஞ்சல் துறைக்கு வருமானம் அதிகம் கிடைக்கிறது.

* தபால்காரர் கடிதம் கொண்டு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள் இன்றும் உண்டு. ஆரம்ப காலங்களில் தபால்காரர் நடந்து செல்லும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்வார்களாம்.

* இப்போது சைக்கிள்கள் மூலம் தபால்களை கொண்டு செல்வோர் உண்டு.. இப்போது தபால்களை பட்டுவாடா செய்யும் பணியில் ஏராளமான பெண்களும் இருப்பது வரவேற்கத்தக்கதும் கூட. மழை, வெயில் என எந்த சீசனாக இருந்தாலும் தங்கள் பணியின் பொறுப்பு உணர்ந்து செயல்படும் தபால்காரர்களுக்கு நன்றி செலுத்தும் நேரமிது.


Next Story

மேலும் செய்திகள்