காஞ்சிபுரம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கரைகள் சீரமைப்பு
காஞ்சிபுரம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில் உள்ளது, கள்ளிப்பட்டு ஏரி. 150 ஏக்கர் பரப்பளவில் 2 மதகுகளுடன் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறி கள்ளிப்பட்டு ஏரி பாழடைந்து காணப்பட்டது. இதனால் பயிர்சாகுபடி செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஏரியை சீரமைத்து தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் 93 லட்சம் ரூபாய் செலவில் ஏரியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. 25 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளிப்பட்டி ஏரியின் 2 மதகுகள் புதிதாக கட்டப்பட்டு ஆயிரத்து 100 மீட்டர் நீளமுள்ள ஏரியின் கரைகள் உயர்த்தி பலபடுத்தப்பட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஏரியை சீரமைத்தன் மூலம் புத்தகரம் பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் என்பதால் விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்து அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story

