துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு...

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தொழிலாளர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு...
x
அண்ணா சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை தொழிலாளர்களின் கண்டன பேரணி நடைபெற்றது. 24 சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். வருகிற 23ஆம் தேதி துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதற்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், உண்ணாவிரதம், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அச்சங்கத்தின் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்