தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை..!

ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை..!
x
தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கூறி சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து 124 பிரிவின் கீழ் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோபாலை 124 சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என ஊடக பிரதிநிதியான இந்து ராம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் எந்த வித முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நக்கீரன் கோபால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 


நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தவறாக அமையும் - என்.ராம்


நக்கீரன் கோபால் விடுதலை: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் - முத்தரசன்


நக்கீரன் கோபால் விடுதலை: சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி - திருமாவளவன் 


நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார் - பி.டி பெருமாள், வழக்கறிஞர்



Next Story

மேலும் செய்திகள்