நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் அவரது 3-வது மனைவி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.
நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்
x
நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதாவின்,  மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் சேர்ந்து 3-வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இதனிடையே மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா, மீரான் ஆகிய 4 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது தாக்குதல் நடந்தபொழுது, மன்சூர் அலிகான் வீட்டில் இருந்ததாகவும், அவர் அமைதியாக இதை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் வஹிதா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்