அமாவாசைகளிலேயே சிறந்த மஹாளய அமாவாசை...
பதிவு : அக்டோபர் 08, 2018, 09:47 AM
அமாவாசைகளிலேயே சிறப்புக் குரியதாக கருதப்படும் மஹாளய அமாவாசை குறித்த தகவல்கள்
* புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால் அதற்கான முழுப் பயனையும் பெறலாம்.

* ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. 

* இதையொட்டி வரும் மகாளய பட்சம், ஆவணி மாதத்தில், பெளர்ணமி முடிந்த மறுநாள் தொடங்குகிறது. அதிலிருந்து புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை - அதாவது 14 நாட்கள், மகாளய பட்சம் ஆகும். 

* மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அதற்கான முழுப் பயனையும் பெறலாம். 

* மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள், பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது, மிகவும் நல்லது ஆகும்.

* மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

* இந்நாட்களில் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

* மகாளய அமாவாசையில் செய்யும் அன்னதானம், முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள், மிகவும் திருப்தியுடன், தமது சந்ததியினரை மன நிறைவுடன் வாழ்த்துவார்கள்.

பிற செய்திகள்

அமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.

25 views

வேகமெடுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.

44 views

தேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.

131 views

எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

245 views

சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

11 views

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.