புரட்டாசி மகாளய அமாவாசை : நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பதிவு : அக்டோபர் 08, 2018, 09:39 AM
மாற்றம் : அக்டோபர் 08, 2018, 11:37 AM
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர். அதன்பின் கடற்கரையில் அமர்ந்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக சங்கல்ப பூஜையும், அதனை தொடர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து, அமாவாசை விரதத்தை முடித்தனர். பக்தர்கள் நலன் கருதி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் :புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில், அதிகாலையிலேயே 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இறந்த மூதாதையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பண்டங்கள், பழங்கள் படையலிட்டு, திதி கொடுத்தனர். 

கன்னியாகுமரி :இதேபோல, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, இறந்த மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். பூஜை செய்த, அந்த பொருட்களை கடலில் கரைத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர், கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சர்வ தீர்த்தம் உள்ளிட்ட குளக்கரைகளில் குவிந்த திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். மாவு பிண்டங்களை குளங்களில் கரைத்த பக்தர்கள், பசுக்களுக்கு  அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

60 views

ராமேஸ்வரத்தில் 8 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை : கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்

ராமேஸ்வரத்தில் எட்டுமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் உள்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

84 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

491 views

பிற செய்திகள்

தேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்

கண்களை கவரும் நெருப்பு அருவி

26 views

வீரமரணம் அடைந்த கேரள வீரர் வசந்தகுமார் குடும்பத்தினருக்கு கேரள முதலமைச்சர் ஆறுதல்

ரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

33 views

ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

46 views

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஒரே நாளில் 2,000 பேர் குவிந்தனர்

48 views

சவுதி இளவரசருக்கு விருந்தளித்த குடியரசு தலைவர் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு

45 views

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.