பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் - பக்தர்களை மாடு தாண்டும் விநோத வழிபாடு...

ராசிபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தின் போது, பக்தர்களை மாடு தாண்டும் விநோத வழிபாடு நடைபெற்றது.
பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் - பக்தர்களை மாடு தாண்டும் விநோத வழிபாடு...
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள  பொன் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.  பின்னர் பக்தர்களை மாடுதாண்டும்  விநோத வழிபாடு நடைபெற்றது. அலங்கரித்து அழைத்து வரப்பட்ட மாடு ,கீழே விழுந்து வணங்கிய பக்தர்களை மிதிக்காமல் 
தாண்டி சென்றது. கால் படாமல் மாடு தாண்டி சென்றால் நன்மைகள் நடக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்