விழுப்புரத்தில் ஒன்றரை டன் குட்கா பறிமுதல்
பதிவு : அக்டோபர் 06, 2018, 09:36 AM
விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒன்றரை டன் குட்கா பொருட்கள் சிக்கின.
விழுப்புரம் சாலமேடு பகுதியில், குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள சீனிவாசா நகரில் நாராயண் ராம் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து குட்கா, பான்மசாலா, ஹன்ஸ் என ஒன்றரை டன் எடையிலான புகையிலை பொருட்கள் சிக்கின. இதுகுறித்து நடந்த விசாரணையில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விழுப்புரத்தில் நாராயண் ராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதலான குட்காவில் சில பாக்கெட்டுகளை சோதனைக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர். அதன் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் குட்கா பொருட்களை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

44 views

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

178 views

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

21197 views

பிற செய்திகள்

நாங்கூரில் சங்க கால இரும்பு பட்டறை கண்டுபிடிப்பு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே, நாங்கூரில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வில் சங்ககால பொருட்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லர் பட்டறை ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

5 views

சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை : 23 மாட்டு வண்டிகள் பறிமுதல்-31 பேர் கைது

புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி 31 பேரை கைது செய்த போலீசார், 23 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

4 views

இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை திட்டம் : ரயில் பாதை அமைக்க மண் கிடைப்பதில் தாமதம்

ரயில் பாதை அமைக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

23 views

அழிந்து வரும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்

அரிய வகை வன உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் திட்டங்களை வனத்துறை செயல்படுத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 views

பீகாரை தொடர்ந்து கோவையிலும் பரவுகிறதா மூளை காய்ச்சல் ? - பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

228 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.