"எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணிகளுக்கு ரூ.1264 கோடி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"எய்ம்ஸ் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணிகளுக்கு ரூ.1264 கோடி - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நிறைவு பெற்றதாகவும், திட்டப்பணிகளுக்காக 1264 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதலை விரைவில் அமைச்சரவையை கூட்டி வழங்க இருப்பதாகவும், இது குறித்து பிரமருக்கு அழுத்தம் அளிக்க முதலமைச்சர் 8ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த ஞாயிற்று கிழமை எய்ம்ஸ் குறித்து வெளியான ஆர்.டி.ஐ தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்