திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மறுப்பு : விரக்தியடைந்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

திருமணம் செய்து வைக்க உறவினர்கள மறுத்ததால், காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மறுப்பு : விரக்தியடைந்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
x
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் தங்கபாலு. இவர் அதே பகுதியை சேர்ந்த மைனாவதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டியில் வசிக்கும் தன் சகோதரியின் வீட்டுக்கு மைனாவதியை அழைத்து வந்துள்ளார் தங்கபாலு. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்வதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் கரடு என்ற பகுதிக்கு சென்று அங்கு புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இரண்டு பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்