நகை பட்டறையில் தங்க கம்பி திருடியவர் கைது

விழுப்புரம் காமராஜர் சாலை அருகே பாஸ்கரன் என்பவர் நகைப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
நகை பட்டறையில் தங்க கம்பி திருடியவர் கைது
x
விழுப்புரம் காமராஜர் சாலை அருகே பாஸ்கரன் என்பவர் நகைப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஃபெரோஜ் என்ற தொழிலாளி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் 500 கிராம் தங்க கம்பியை பாஸ்கர் ஓப்படைத்துவிட்டு சென்றுள்ளார். இதில் திரும்பி வந்து பார்த்த போது ஃபெரோஜ் தங்க கம்பியை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளார். பின்னர் ஆரம்பாக்கத்தில் இருந்த ஃபெரோஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்