ஐ.எஸ் தீவிரவாதி அன்சார் மீரான் காவலை நீட்டிக்க, நீதிமன்றத்தில் பரிந்துரை கடிதம்...
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அன்சார் மீரானின், காவலை நீட்டிக்க, பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரிந்துரை கடிதம் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
* கடந்த பிப்ரவரி மாதம், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அன்சார் மீரான் என்பவர், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடலூர் மத்திய சிறைக்கு அன்சார் மீரான் மாற்றப்பட்ட நிலையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, கடலூர் சிறையை தகர்த்து அன்சாரை மீட்கப் போவதாக ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டல் வந்தது.
* இதனைத் தொடர்ந்து, கடலூர் மத்திய சிறை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. சிறையில் நடக்கவிருந்த காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அன்சார் மீரானின் காவல் நீட்டிப்புக்காக, அவர் இன்று, சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதையடுத்து, பரிந்துரை கடிதம் மூலம், அன்சாருக்கு காவல் நீட்டிப்பு பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story