பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவன்

பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவன்
x
* பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கிஷோர் என்ற 5ம் வகுப்பு மாணவன், கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி, பள்ளி கட்ட‌ட வேலையின் போது கண்ணில் கல் போன்ற பொருள் விழுந்து கண்பார்வை இழந்தார். 

* இதையடுத்து மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் பணி செய்த கட்ட‌ட ஒப்பந்தகார‌ர் மற்றும் முதலுதவி செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கிஷோரின் தாயார் ரம்யா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், மாணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்