9 பேரைக் கொன்ற பெண் காட்டு யானை - அச்சத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவார பகுதியில் விளைநிலங்களில், ஒற்றை பெண் காட்டு யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
9 பேரைக் கொன்ற பெண் காட்டு யானை - அச்சத்தில் விவசாயிகள்
x
இந்த யானை இதுவரை மொத்தம் 9 பேரை கொன்றுள்ளது. இதை விரட்டியடிக்க வனத்துறையினர், 2 கும்கி யானைகளை கொண்டு வந்து சுமார் 40 நாட்கள் முயற்சி செய்தனர். ஆனால் பிடிக்க முடியாமல் கும்கி யானைகளை மீண்டும் முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மீண்டும் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. யானையை விரைவாக பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்