அரசு மருத்துவமனையில் இயங்காத மின்விசிறிகள் - கொசுக்களால் சிரமப்படுவதாக நோயாளிகள் புகார்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மின்விசிறிகள் இயங்காததால் கடும் சிரமப்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்
அரசு மருத்துவமனையில் இயங்காத மின்விசிறிகள் - கொசுக்களால் சிரமப்படுவதாக நோயாளிகள் புகார்
x
சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள பிரசவ வார்டியில் மின்விசிறிகள் இருந்தும் பெரும்பாலானவை இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போதிய காற்று வசதியின்றி  கைக்குழந்தைகளுடன், பெண்கள் கடும் சிரமப்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகம் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வார்டில் அனைத்து மின்விசிறிகளும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்