போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியில் போதையில் பட்டாகத்தியுடன் வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது
x
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியில் போதையில் பட்டாகத்தியுடன்  வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.நள்ளிரவு 12 மணியளவில் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பட்டா கத்தி, உருட்டுகட்டை, கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி தெருக்களில் நின்று கொண்டிருந்த 15 இருசக்கர வாகனம், 3 கார், ஒரு ஆட்டோ என 20க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து அவர்களை விரட்ட முயற்சித்தபோது கத்தியுடன் இருந்த இளைஞர்கள் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்  அருண், முரளி,கார்த்திக்,நாகராஜ்,சலீம் ஆகிய 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்