ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி...

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி...
x
* மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டியை சேர்ந்த மாதவன், பல ஆண்டுகளாக மாட்டு தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரிடம் பணம் தருகிறேன் என்று கூறி, பல முறை மாட்டுத்தீவனத்தை வாங்கி சென்ற ஜெயராமன் என்பவர் நாளடைவில் பணம் தர மறுத்துள்ளார். 

* இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில்  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மாதவன் சென்றுள்ளார்.அப்போது  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ குளிக்க முயசித்த அவரை தடுத்து நிறுத்திய போலீசார், காவல் நிலையத்திற்கு  அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்