சக ஊழியரின் சடலத்தை ஊர்வலமாக தூக்கி சென்ற எஸ்.பி

சக ஊரியரின் சடலத்தை ஊர்வலமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சக ஊழியரின் சடலத்தை ஊர்வலமாக தூக்கி சென்ற எஸ்.பி
x
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் என்பவர் வேதாரண்யத்தில் உள்ள காவல்நிலையத்தில் காவல் ஆய்வளாராக பணியாற்றி வந்துள்ளார். கண்ணையன் அவரது சொந்த ஊருக்கு சென்ற போது அவரது மகள் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனை கேள்விப்பட்ட தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், கண்ணையனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது சொந்த ஊரான குப்பூர் கிராமத்திற்கு சென்றார். 

அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பண்டி கங்காதர், அதன் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கண்ணையனின் உடலை சுமந்து சென்றார். சக ஊழியருக்கு இவ்வாறு மரியாதை செலுத்திய பண்டி கங்காதரின் செயல் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்