குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளவை எட்டியதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்